,

BUY இந்திய தேசிய இயக்க வரலாறு | பேரா. க.வெங்கடேசன் | TNPSC UPSC உள்ளிட்ட ஆட்சிப் பணியாளர் தேர்வுகளுக்கு பயன் தரக்கூடியது| BEST PUBLICATION | LATEST 2025 EDITION |

450.00

+ Shipping charges
BUY இந்திய தேசிய இயக்க வரலாறு |பேரா. க.வெங்கடேசன் | TNPSC UPSC உள்ளிட்ட ஆட்சிப் பணியாளர் தேர்வுகளுக்கு பயன் தரக்கூடியது| BEST PUBLICATION |
LATEST 2025 EDITION

AUTHOUR: பேரா. க.வெங்கடேசன்.

Wishlist Compare
BUY இந்திய தேசிய இயக்க வரலாறு |பேரா. க.வெங்கடேசன் | TNPSC UPSC உள்ளிட்ட ஆட்சிப் பணியாளர் தேர்வுகளுக்கு பயன் தரக்கூடியது| BEST PUBLICATION | LATEST 2025 EDITION |

 

இந்திய தேசிய இயக்க வரலாறு – TNPSC, UPSC உள்ளிட்ட ஆட்சிப் பணியாளர் தேர்வுகளுக்கு பெரிதும் பயன் தரக்கூடியது

இந்திய தேசியம் என்பது ஆங்கிலேயர்களின் அடக்குமுறை ஆட்சியை எதிர்க்கத் தலைப்பட்டதிலிருந்து உருவெடுத்தது என்று சொல்லலாம். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நமது நாட்டுப் பற்றாளர்கள், இயக்கங்கள், கோஷ்டிகள் மற்றும் தலைவர்கள் நடத்திய போராட்டங்கள், கிளர்ச்சிகள், புரட்சிகள் ஆகியன இந்திய தேசிய இயக்கமாக படிப்படியாக வலுப்பெற்று இந்திய விடுதலைக்கு வழிவகுத்தது எனலாம்.

இவ்வாறு இந்திய விடுதலைப் போராட்டத்தில் இடம் பெற்ற அனைத்து நிகழ்வுகளையும் இந்திய தேசிய இயக்க வரலாறாக இந்நூலில் படம் பிடித்துக் காட்டுகின்றார் வரலாற்று அறிஞர் பேராசிரியர் க.வெங்கடேசன்.

TNPSC, UPSC உள்ளிட்ட ஆட்சிப் பணியாளர் தேர்வுகளுக்கு பயன் தரக்கூடிய வகையில் அமைந்துள்ள, அதே நேரம் இந்திய நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் வாசித்து தெரிந்து கொள்ள வேண்டிய இந்நூலை மொத்தம் 11 பெரும் பகுதிகளாகப் பிரித்து அவற்றின் கீழ் 34 அத்தியாயங்களில் விவரித்துள்ளார் பேராசிரியர் க.வெங்கடேசன்.

442 பக்கங்கள் என விரிவாகச் செல்லும் இந்நூலில் ஆங்கிலேய ஆதிக்கம், அதற்கு எதிராக கிளர்ச்சிகளும் இயக்கங்களும் உருவாதல், இந்தியப் பிரிவினை, இந்திய சுதந்திரம் ஆகிய தலைப்புகளின் கீழான அத்தியாயங்கள் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. இந்திய தேசிய இயக்கம் தொடர்ச்சியாகப் போராடி வெற்றியைப் பெறவில்லை என்றும், அது படிப்படியாக, விட்டுவிட்டு, தகுந்த பல முறைகளைப் பின்பற்றி எவ்வாறு இந்திய விடுதலை என்ற வெற்றிக் கனியைப் பறித்தது என்பதை பாங்குற இந்நூலில் பட்டியலிட்டுக் கூறுகிறார் இதன் நூலாசிரியர்.

மேலும் காங்கிரஸ் ஒரு அரசியல் கட்சியாக செயல்படாமல் எவ்வாறு அது ஓர் இயக்கமாக சுதந்திரப் போராட்டத்தை முன்னின்று நடத்தியது என்றும் இந்தியர்களிடையே நாட்டுப்பற்றை வளர்த்து, இந்திய சுதந்திரப் போராட்டத்தை மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றியது என்றும் கூறியுள்ளார். காங்கிரஸின் மிதவாதிகள், தீவிரவாதிகள் மற்றும் வன்முறைவாதிகள் பற்றி விரிவானதொரு பார்வையையும் தந்துள்ளார்.

இதற்கும் மேலாக  இந்நூலில் ஒத்துழையாமை இயக்கம், தனிநபர் சத்தியாகிரம், வெள்ளையளே வெளியேறு இயக்கம், சட்டமறுப்பு இயக்கம், சுயராஜ்ஜிய இயக்கம் போன்றவற்றைப் பற்றியும், இந்திய அரசாங்கச் சட்டம், இந்திய விடுதலைச் சட்டம் பற்றியும் விரிவாக கூறியுள்ளார். தொடர்ந்து இந்திய தேசிய இயக்கத்தில் புரட்சியாளர்களின் பங்கு, பத்திரிக்கைகளின் பங்கு, நேருவின் பங்கு மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் மேற்கொண்ட இந்தியப் போர் முயற்சி ஆகியவற்றை மையமாக கொண்ட பல்வேறு முக்கிய சங்கதிகள் இந்நூலை நிறைவாக்குகின்றது எனலாம்.

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றைப் பற்றிக் கூறும் இந்த நூல் முன் சொன்னது போல் TNPSC மற்றும் UPSC போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள், வரலாற்றுத்துறை மாணவர்கள், வரலாற்று ஆசிரியர்கள், வரலாற்றாளர்கள் மற்றும் வரலாற்றை அறிய விரும்பும் அனைவருக்கும் பயன்படும் அரிய நூலாகும்.

இந்நூலின் விரிவான பொருளடக்கம் வருமாறு :-

பகுதி-I கம்பெனி ஆட்சியின் தாக்கம்

1. இந்தியாவில் ஆங்கிலக் கம்பெனியின் ஆட்சி
1.1 ஐரோப்பியர்-இந்தியர் தொடர்பு
1.2 கம்பெனியின் நிர்வாகச் சீர்திருத்தங்கள்

2.கம்பெனி ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள்
2.1 தென்னிந்தியாவில் ஆங்கிலேயர் ஆதிக்கம்
2.2 கிளர்ச்சிக்கான காரணங்கள்
2.3 நான்கு பிராந்தியக் கூட்டமைப்புகள்
2.4 கிளர்ச்சியின் போக்கு
2.5 பாஞ்சாலங்குறிச்சிப் போர்கள்
2.6 கிளர்ச்சி முறியடிப்பு

3. வேலூர்க் கிளர்ச்சி (1806)
3.1 சாதகமான சூழ்நிலை
3.2. கிளர்ச்சிக்கான காரணங்கள்
3.3 கிளர்ச்சிக்குத் திட்டமிடல்
3.4 கிளர்ச்சியின் போக்கு
3.5 கிளர்ச்சியின் தோல்வி
3.6 கிளர்ச்சியின் இயல்பும் சிறப்பும்

4. ஆங்கிலேயருக்கு உட்புற எதிர்ப்புகள் (1808-1857)
4.1 ஆங்கிலேய எதிர்ப்பு போராட்டங்கள்
4.2 ஆந்திரப் பகுதிகளில் எதிர்ப்பு
4.3 மேற்கிந்தியாவில் ஏற்பட்ட எதிர்ப்பு
4.4 கிழக்கிந்தியாவில் ஏற்பட்ட எதிர்ப்பு

5. பெருங்கிளர்ச்சி (1857)
5.1 முக்கிய திருப்புமுனை
5.2 கிளர்ச்சிக்கான காரணங்கள்
5.3 பொருளாதாரக் காரணங்கள்
5.4 நிர்வாகக் காரணங்கள்
5.5 சமுதாயக் காரணங்கள்
5.6 மதக் காரணங்கள்
5.7 கிளர்ச்சி பரவிய போக்கு
5.8 கிளர்ச்சியை ஒடுக்க நடவடிக்கை
5.9 கிளர்ச்சியின் தன்மையும், சிறப்பும்

பகுதி-II மறுமலர்ச்சி

6. சமய, சமூக, கலாச்சார விழிப்புணர்ச்சி
6.1 இந்திய தேசிய உணர்வு
6.2 பிரம்ம சமாஜம்
6.3 பிரார்த்தனா சமாஜம் – துவக்கம்
6.4 ஆரிய சமாஜம் – தோற்றம்
6.5 இராமகிருஷ்ண இயக்கம் – தோற்றம்
6.6 பிரம்மஞான சபை – துவக்கம்
6.7 அலிகார் இயக்கம் உருவாதல்
6.8 சாதிமுறை – சீரமைப்பு
6.9 மதிப்பீடு

பகுதி-III முதல் தேசிய முயற்சி

7. இந்திய தேசிய இயக்கம்
7.1 தேசியம் மலர்ந்தது
7.2 இந்திய தேசிய இயக்கம் தோன்றக் காரணங்கள்
7.3 இல்பர்ட் மசோதா எதிர்ப்பும், ஆதரவும்

8. அரசியல் சார்ந்த அமைப்புகள் – (காங்கிரசுக்கு முன்)
8.1 மாற்றியமைத்த மாற்றங்கள்
8.2 அரசியல் சார்ந்த அமைப்புகள் (வங்காள ராஜதானி)
8.3 அரசியல் சார்ந்த அமைப்புகள் (பம்பாய் ராஜதானி)
8.4 அரசியல் சார்ந்த அமைப்புகள் (சென்னை ராஜதானி)

பகுதி-IV தேசிய இயக்கத்தின் திறவுகோல்

9. சுதேசி இயக்கம் (1905-1908)
9.1 சுதேசி இயக்கப் பின்னணி
9.2 தீவிர தேசியவாதம்
9.3 வங்கப் பிரிவினைத் திட்டம்
9.4 சுதேசி இயக்கம் பிறந்தது
9.5 சுரேந்திரநாத் பானர்ஜி (1848-1925)
9.6 பிபின் சந்திர பால் (1858-1932)

பகுதி-V காங்கிரஸ் கோஷ்டிகள்

10. இந்திய தேசிய காங்கிரஸ் (1885-1905)
10.1 வரலாற்றுத் திருப்பம்
10.2 காங்கிரசின் தோற்றம்
10.3 இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டம்
10.4 காங்கிரசின் வளர்ச்சி
10.5 காங்கிரசின் சாதனைகள்

11. காங்கிரஸ் மிதவாதிகள்
11.1 நாட்டுப் பற்றாளர்கள்
11.2 மிதவாதிகள் – தேசியவாதிகள்
11.3 மிதவாதிகளின் சாதனைகள்
11.4 மிதவாதிகளின் குறைபாடுகள்
11.5 மிதவாதிகளின் சட்டமன்றப் பணி
11.6 பெரோஸ்ஷா மேத்தா – தோற்றகர்த்தா
11.7 கோபால கிருஷ்ண கோகலே – இந்தியாவின் வைரம்
11.8 தாதாபாய் நௌரோஜி – மராத்திய மைந்தர்
11.9 உமேஷ் சந்திர பானர்ஜி – முதல் தலைவர்

12.காங்கிரஸ் தீவிரவாதிகள்
12.1 தீவிரவாதிகளின் சகாப்தம்
12.2 தீவிர இயக்கத்தின் தீர்க்கதரிசி
12.3 தேசிய இயக்கத்தின் தீவிரம்
12.4 சூரத் பிளவு
12.5 தமிழ்நாட்டில் தீவிரவாத இயக்கம்
12.6 மிதவாதிகள் தீவிரவாதிகள்: ஓர் ஒப்பீடு
12.7 விடுதலைப் போராட்டம்-திலகரின் பங்கு

13. காங்கிரஸ் வன்முறைவாதிகள்
13.1 வன்முறைவாதிகள் / புரட்சிவாதிகள்
13.2 வெளிநாடுகளில் இந்திய தேசிய இயக்கப் போராட்டம்
13.3 கதார் இயக்கம் – வட அமெரிக்கா
13.4 காமகட்டாமாறு கப்பல் நிகழ்ச்சி

பகுதி-VI முஸ்ஸீம் லீக் தோற்றம்

14. முஸ்லீம் லீக் (1906)
14.1 பின்தங்கிய சிறுபான்மையினர்
14.2 தூண்டப்பட்ட சிறுபான்மையினர்
14.3 முஸ்லீம் பெரும்பான்மையின் மாநிலம்
14.4 சிம்லா தூதுக்குழுவின் கோரிக்கைகள்
14.5 அகில இந்திய முஸ்லீம் லீக்
14.6 பிரிட்டிஷாரின் பிரித்தாளும் கொள்கை

பகுதி -VII புரட்சிகர மாற்றங்கள்

15. மார்லி மிண்டோ சீர்திருத்தங்கள் (1909)
15.1 செயல் சுதந்திரத் தடை
15.2 எதிர்ப்பு முறியடிப்பு
15.3 மார்லி- மிண்டோ சீர்திருத்தங்கள்
15.4 சீர்திருத்தத்தின் தோல்விகள்
15.5 டெல்லி தர்பார் – அறிவிப்புகள்

பகுதி-VIII அரசியல் விழிப்புணர்வு

16. முதல் உலகப் போரும் போராட்டங்களும் (1914-1918)
16.1 முதல் உலகப்போருக்கு ஆதரவு
16.2 சுயாட்சி இயக்கம் – தோற்றம்
16.3 சுயாட்சி சங்கம் திலகர்
16.4 சுயாட்சி சங்கம் பெசண்ட்
16.5 முக்கியத்துவமிக்க ஆகஸ்டுப் பிரகடனம்

17. ரெளலட் சத்தியாக்கிரகம் (1919)
17.1 காந்தியின் வருகை
17.2 ரௌலட் சட்டம் நிறைவேற்றம்
17.3 அகிம்சையே ஆயுதம்
17.4 ஜாலியன் வாலாபாக் படுகொலை – கோர நிகழ்வு
17.5 இராணுவச் சட்ட நடவடிக்கைகள்
17.6 ஹண்டர் விசாரணைக்குழு அறிக்கை
17.7 ரௌலட் சத்தியாகிரகத்தில் தமிழ்நாட்டின் பங்கு

18. மாண்ட் போர்டு சீர்திருத்தங்களும் இரட்டை ஆட்சியும் (1919)
18.1 இந்திய அரசாங்கச் சட்டம் (1919)
18.2 இரட்டை ஆட்சி முறை

19. சுயராஜ்யப் போராட்டங்கள் : கிலாபத் இயக்கம்  (1919-1922)
19.1 கிலாபத் பிரச்சினை, போராட்டம்
19.2 கிலாபத் கிளர்ச்சி
19.3 கிலாபத் இயக்கம்
19.4 மதிப்பீடு

20. ஒத்துழையாமை இயக்கம் (1920-22)
20.1 நம்பிக்கையற்ற சூழ்நிலைகள்
20.2 ஒத்துழையாமைத் தீர்மானம் நிறைவேற்றம்
20.3 ஒத்துழையாமை இயக்கத் திட்டம்
20.4 மலபார் மாப்பிள்ளைகள் கிளர்ச்சி
20.5 வேல்ஸ் இளவரசர் வருகையும் புறக்கணிப்பும்.
20.6 காந்தியின் இறுதி எச்சரிக்கை
20.7 சௌரி சௌரா வன்முறை நிகழ்ச்சி
20.8 ஒத்துழையாமை இயக்கத்தின் வரலாற்றுச் சிறப்பு

பகுதி-IX புதிய பாதையில் போராட்டம்

21. சுயராஜ்ய இயக்கம் (1923-1926)
21.1 சட்டமன்றப் புறக்கணிப்பு
21.2 சுயராஜ்யக் கட்சி
21.3 சுயராஜ்யக் கட்சியினரின் சாதனைகள்
21.4 மதிப்பீடு

22. சைமன் குழு (1927-1929)
22.1 அனைத்துக் கட்சி மாநாடு
22.2 சைமன் குழு அமைக்கப்படல்
22.3 சைமன் குழு புறக்கணிப்பு
22.4 சைமன் குழு அறிக்கை
22.5 நேரு அறிக்கை
22.6 ஜின்னாவின் 14 அம்சத் திட்டம்
22.7 பூர்ண சுயராஜ்யம் தினம்

23. சட்டமறுப்பு இயக்கம் (1930-1934)
23.1 பதினொரு அம்சக் கோரிக்கை
23.2 உப்பு சத்தியாக்கிரகம் – அறப்போர்
23.3 தண்டி யாத்திரை – போராட்ட பயணம்
23.4 வட்டமேஜை மாநாடுகள் விளைவுகள்
23.5 மதிப்பீடு

24. இடதுசாரிகள் இயக்கம்
24.1 இடதுசாரிகள்
24.2 புரட்சிப் போராட்டம்
24.3 இடதுசாரி இயக்கத்தின் சாதனைகளும் தாக்கமும்

பகுதி-X இந்திய தேசியத்தின் எழுச்சி

25. 1935 இந்திய அரசியல் சட்டமும் மாநில சுயாட்சியும்
25.1 இந்திய அரசாங்கச் சட்டம்
25.2 மாநில சுயாட்சியின் அனுபவம்
25.3 மதிப்பீடு

26. கிரிப்ஸ் தூதுக்குழு (1942)
26.1 இரண்டாவது உலகப்போரும் இந்தியாவும்
26.2 கிரிப்ஸ் தூதுக்குழுவின் வருகை
26.3 அமைச்சரவையின் கொள்கை விளக்கங்கள்
26.4 கிரிப்ஸ் தூதுக்குழு- தோல்விக்கான காரணங்கள்

27. வெள்ளையனே வெளியேறு கிளர்ச்சி (1942)
27.1 புதிய கிளர்ச்சி
27.2 பல சூழ்நிலைகள்
27.3 வெள்ளையனே வெளியேறு தீர்மானம்
27.4 மக்களின் வன்முறை
27.5 வீழ்ச்சிக்கான காரணங்கள்
27.6 இயக்கத்தின் இயல்புகள்
27.7 மதிப்பீடு

28. சுபாஷ் சந்திரபோகம் இந்திய தேசிய இராணுவமும் (1942-1945)

28.1 சுபாஷ் சந்திர போசின் எழுச்சி
28.2 பார்வர்டு பிளாக் கட்சி துவக்கம்
28.3 இந்திய தேசிய இராணுவம் தோற்றம்
28.4 சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கம்
28.5 இந்திய தேசிய இராணுவப் போராட்டத்தின் சிறப்பு

29. அமைச்சரவை தாதுக்குழு (1946)
29.1 பேச்சுவார்த்தையே தீர்வு
29.2 தூதுக்குழுவின் வருகைக்கு முந்தைய நிகழ்ச்சிகள்
29.3 காந்தி-ஜின்னா சந்திப்பின் தோல்வி
29.4 தேசாய் -லியாகத் உடன்பாடு ஏற்படல்
29.5 வேவல் திட்டம் அறிவிப்பு
29.6 சிம்லா மாநாடு-நோக்கம்
29.7 கப்பற்பனட்டைக் கலவரம்
29.8 அமைச்சரவைத் தூதுக்குழு
29.9 தூதுக்குழுவின் திட்டம்
29.10 இடைக்கால அரசு அமைதல்
29.11 நோடி நடவடிக்கை நாள் அனுசரிப்பு
29.12 தற்காலிக தேசிய அரசாங்கம்

30. பிரிவிளையும் விடுதலையும் (1947)
30.1 முக்கியத்துவமிக்க அட்லியின் அறிவிப்பு
30.2 வொஸ்ட்பேட்டன் திட்டம் – சிறப்புக் கூறுகள்
30.3 முடிந்த முடியானது
30.4 இந்தியாவின் விடுதலை
30.5 வெள்ளையன் வெளியேறியது ஏன்?
30.6 தவிர்க்க இயலா தேசப் பிரிவினை
30.7 விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றுச் சிறப்புகள்

பகுதி-XI பன்முகப் பரிமாணங்கள்

31. வகுப்புவாதத்தின் வளர்ச்சி
31.1 வகுப்புவாதம் : வரையறை
31.2 முஸ்லீம் வகுப்புவாதம் தோற்றம்
31.3 முஸ்லிம் வகுப்புவாத வளர்ச்சி
31.4 பிரிவினை வகுப்புவாத வளர்ச்சி (1937-47)
31.5 போர்ப் பாதையில் ஜின்னா (1937-42)
31.6 இந்து வகுப்புவாதம் – தோற்றம்
31.7 இந்து வகுப்புவாத வளர்ச்சி (1909 – 1937)
31.8 ராஷ்ட்ரிய சுவயம் சேவக் சங்கம் – தோற்றம்

32. இந்திய தேசிய இயக்கத்தில் புரட்சியாளர்களின் பங்கு
32.1 காங்கிரஸ் தீவிரவாதிகள்
32.2 போராட்டப் புரட்சியாளர்கள்
32.3 இந்துஸ்தான் குடியரசு சங்கம் (1924)
32.4 சுகோரி சதி வழக்கு (1925)
32.5 இந்துஸ்தான் சோஷலிஸ்டு குடியரசு சங்கம் (1928)3
32.6 சான்டர்ஸ் கொலை (1928)
32.7 சட்டமன்றத்தில் வெடிகுண்டு வீச்சு (1929)
32.8 சிட்டகாங் கிளர்ச்சி (1930)
32.9 லாகூர் சதி வழக்குத் தீர்ப்பு (1931)
32.10 பகத்சிங் (1907-1931)

33. இந்தியதேசிய இயக்கத்தில் பத்திரிகைகளின் பங்கு
33.1 பத்திரிகை சுதந்திரம்
33.2 காங்கிரசும் பத்திரிகைகளும்
33.3 பத்திரிகை விரோதச் சட்டங்கள்
33.4 தாய்மொழி பத்திரிகை சட்டம் – லிட்டன் பிரபு
33.5 விசித்திர வழக்கு (1883)
33.6 லோகமானியர் – திலகர்
33.7 தாய்மொழிப் பத்திரிகைச் சங்கம் (1891)
33.8 சுதேசி இயக்கமும் பத்திரிகைகளும்
33.9 புதிய பத்திரிகைச் சட்டம் விளைவுகள்
33.10 சுயாட்சி இயக்கமும் பத்திரிகைகளும்
33.11 போராட்டங்களும் பத்திரிகைகளும்
33.12 வெள்ளையனே வெளியேறு இயக்கமும் பத்திரிகைகளும்
33.13 மதிப்பீடு

34. இந்திய தேசிய இயக்கத்தில் நேருவின் பங்கு
34.1 இந்திய தேசியவாதி (1907-1912)
34.2 அரசியல் அறிமுகம் (1912-1916)
34.3 அரசியல் பிரவேசம் (1916-1920)
34.4 அரசியல் தலைவர் (1920-1930)
34.5 போராட்ட தளபதி (1930-1942)
34.6 நெருங்கிய தொடர்பு
34.7 சாதனையாளர் நேரு
34.8 வரலாற்று நாயகர் நேரு

காங்கிரஸ் மாநாடுகள்.

BUY இந்திய தேசிய இயக்க வரலாறு |பேரா. க.வெங்கடேசன் | TNPSC UPSC உள்ளிட்ட ஆட்சிப் பணியாளர் தேர்வுகளுக்கு பயன் தரக்கூடியது| BEST PUBLICATION | LATEST 2025 EDITION |

 

இந்திய விடுதலை இயக்கம் (Indian independence movement) என்பது பிரித்தானிய காலனித்துவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு தெற்கு ஆசியாவில் நடந்த தொடர்ச்சியான வரலாற்று நிகழ்வுகளாகும். 1947 இல் இந்திய விடுதலைச் சட்டம் நிறைவேற்றப்படும் வரை இது நீடித்தது.

இந்திய விடுதலைக்கான முதல் தேசியவாத இயக்கம் வங்காள மாகாணத்தில் உருவானது. பின்னர் அது புதிதாக உருவாக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசு மூலம் வேரூன்றியது. முக்கிய மிதவாத தலைவர்கள் பிரித்தானிய இந்தியாவில் இந்தியக் குடிமைப் பணித் தேர்வுகளில் கலந்து கொள்ள உரிமை கோரினர். அதே போல் பூர்வ குடிகளுக்கு அதிக பொருளாதார உரிமைகளையும் கோரினர். 20ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் சுயாட்சி மீது தீவிர அணுகுமுறை காணப்பட்டது.

 

ALSO REFER,

Buy தமிழ்நாடு அரசாங்கம் நிர்வாகம் ஆளுகை | Tamil Nadu Government Administration and Governance Tamil | தற்கால செய்திகளுடன் செம்மையாக்கப்பட்ட பதிப்பு | 2025| பேராசிரியர் டாக்டர் ஜி.வெங்கடேசன் மற்றும் பொன்.ஸ்வர்ணம் கந்தசாமி| BEST PUBLICATION FOR TNPSC |

Reviews

There are no reviews yet.

Be the first to review “BUY இந்திய தேசிய இயக்க வரலாறு | பேரா. க.வெங்கடேசன் | TNPSC UPSC உள்ளிட்ட ஆட்சிப் பணியாளர் தேர்வுகளுக்கு பயன் தரக்கூடியது| BEST PUBLICATION | LATEST 2025 EDITION |”

Your email address will not be published. Required fields are marked *

Shopping Basket
  • Your basket is empty.