தமிழ்நாடு வரலாறும் பண்பாடும் பண்டைய காலம் மற்றும் இடைக்காலம் | களப்பிரர் காலம் முதல் நாயக்கர் ஆட்சிக்காலம் வரை | இரண்டு நூல்கள் | பேராசிரியர் க.வெங்கடேசன்| சங்க காலம் முழுவதும்|
தமிழ்நாடு வரலாறும் பண்பாடும் – பண்டைய காலம் மற்றும் இடைக்காலம் என்ற தலைப்புகளில் இரண்டு நூல்கள் – பேராசிரியர் க.வெங்கடேசன்
போட்டித்தேர்வுகளுக்கு தமிழ்நாடு வரலாறும் பண்பாடும் என்ற பெருந்தலைப்பின் கீழ் சங்ககாலம் தொடங்கி தற்காலம் வரை படித்தறிய வேண்டியுள்ளது. இதனை முற்கால தமிழ்நாட்டு வரலாறு என்றும், தற்கால தமிழ்நாட்டு வரலாறு என்றும் பொதுவாகப் பிரித்துக் கொள்ளலாம்.
போட்டித்தேர்வர்கள் தமிழ்நாட்டின் தற்கால வரலாற்றை தெரிந்து கொள்ளும் முகமாக “நவீன காலம்” என்றும் “தற்காலம்” என்றும் இரண்டு தலைப்புகளின் கீழ் தமிழ்நாட்டின் நடப்பு ஆட்சி வரை (முதல்வர் திரு ஸ்டாலின் ஆட்சி) பேராசிரியர் க.வெங்கடேசன் அவர்கள் எழுதிய இரண்டு நூல்களை தற்போது வாங்கியிருப்பீர்கள். ஆனால் தமிழ்நாட்டின் தற்கால வரலாற்றை மட்டும் தெரிந்து கொண்டால் போதுமா? முற்கால தமிழ்நாட்டு வரலாற்றையும் தெரிந்து கொள்ள வேண்டாமா? அதாவது தற்கால தமிழ்நாட்டின் ஆட்சி, நிர்வாகம், இலக்கியம், பண்பாட்டிற்கு வித்திட்ட முற்கால தமிழ்நாட்டின் ஆட்சி, ஆட்சிகளின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி, சங்ககால இலக்கியம், பண்பாடு ஆகியவற்றையும் அரசுப்பணிகளுக்கான தேர்வுகளை எழுதும் ஒரு போட்டித்தேர்வர் தெரிந்து கொள்ள வேண்டியது இன்றியமையாதது ஆகும்.
இதற்கு உதவிடும் முகமாக டாக்டர் க.வெங்கடேசன் அவர்கள் தமிழ்நாட்டின் முற்கால வரலாற்றை தமிழ்நாடு வரலாறும் பண்பாடும் என்ற பெருந்தலைப்பில் “பண்டையகாலம்” (சங்ககாலம் முழுவதும்) என்றும், “இடைக்காலம்” (களப்பிரர் காலம் முதல் நாயக்கர் ஆட்சிக்காலம் வரை) என்றும் இரண்டு தொகுதிகளில் எழுதியுள்ளார்.
முதல் தொகுதி பண்டைக்கால தமிழ்நாடு பற்றியது. மேற்சொன்னது போல் இது சங்ககாலம் முழுவதையும் விளக்குகின்றது. இத்தொகுதியில் மூன்று பகுதிகள் உள்ளன. அவை
(1) சங்ககாலத் தமிழ்நாட்டு வரலாறு,
(2) வரலாற்றுக்கு முற்பட்ட தமிழ்நாடு,
(3) சங்க கால இலக்கியம்.
இவற்றில், பழைய கற்கால, சங்ககால தமிழ்நாடு, கீழடி அகழாய்வு, சோழர், பாண்டியர், மதுரை சுல்தான்கள், விஜயநகரம் ஆகிய பேரரசுகளின் மூலம் தமிழ்நாட்டின் வரலாற்றினையும், பண்பாட்டின் பல பரிமாணங்களையும் விரிவாக எழுதியுள்ள ஆசிரியர் வெங்கடேசன், இவர்களது ஆட்சி, எழுச்சி, வீழ்ச்சி பற்றியும் திறனாய்வுக் கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து எழுதியுள்ளார்.
இரண்டாம் தொகுதியான இடைக்கால தமிழ்நாடு (களப்பிரர் காலம் முதல் நாயக்கர் ஆட்சிக்காலம் வரை) என்ற நூல் மொத்தம் எட்டு பகுதிகளைக் கொண்டது. அவை,
(1) களப்பிரர்கள் தமிழ்நாடு,
(2) பல்லவர் காலத் தமிழ்நாடு,
(3) பாண்டியர் காலத் தமிழ்நாடு – I,
(4) சோழர்காலத் தமிழ்நாடு,
(5) பாண்டியர்காலத் தமிழ்நாடு II
(6) மதுரை சுல்தான்கள் காலத் தமிழ்நாடு,
(7) விஜயநகர ஆட்சிகாலத் தமிழ்நாடு மற்றும்
(8) நாயக்கர் ஆட்சிக்காலத் தமிழ்நாடு.
இந்த எட்டுப்பகுதிகளிலும் பண்பாடு, இலக்கியம், பொருளாதார நிலை, சமுதாய நிலை, சமய நிலை, கல்வி நிலை, கவின் கலைகள், வாழ்வியல் முறை, மன்னர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் என நூலாசிரியர் விளக்கியுள்ளார். அத்துடன் இப்பகுதிகளை திறனாய்வு செய்தும் எழுதியுள்ளார்.
மைய ஆட்சிப்பணியாளர் தேர்வாணையம் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கும் இந்த இரண்டு நூல்களும் ஓர் வரப்பிரசாதம் என்றால் அது மிகையன்று.
இந்த இரண்டு நூல்களுடன் தற்கால தமிழ்நாட்டு வரலாற்றை விளக்கும் மேற்சொன்ன தமிழ்நாடு வரலாறும் பண்பாடும் – நவீன காலம் (ஐரோப்பியர் வருகை முதல் நீதிக்கட்சி வரை) மற்றும் தற்காலம் [(சி.இராஜகோபாலாச்சாரி முதல் மு.க.ஸ்டாலின் ஆட்சி (2021 – )] என்ற இரண்டு நூல்களை இன்னும் வாங்காமல் இருந்தால், அவற்றை இன்றே தனியாக வாங்கி வரவிருக்கும் தேர்வுகளுக்கு தயாராகவும்.
சேர, சோழ, பாண்டிய மற்றும் பல்லவ பேரரசுகளே நான்கு பண்டைய பூர்வீக தமிழ் பேரரசுகளாக இருந்தன. இவர்கள் தனித்தன்மை வாய்ந்த கலாச்சாரம் மற்றும் மொழி ஆகியவற்றைக் கொண்டு இந்தப் பகுதியை ஆட்சி செய்தனர், இதனால் உலகில் அழியாமல் வழக்கத்திலிருந்த சில பழமையான இலக்கியங்களின் வளர்ச்சி சாத்தியமானது.
இவர்கள் ரோமப் பேரரசுடன் அதிகப்படியான கடல்வழி வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். இப்பகுதியின் தலைமைக்காக இந்த மூன்று வம்சத்தைச் சேர்ந்தவர்களும் ஒருவருக்கொருவர் தொடர்ச்சியாக போரிட்டுக் கொண்டனர்.
மூன்று பேரரசுகளும் பாரம்பரியமாக ஆட்சி செய்துவந்த இந்தப் பகுதியை மூன்றாம் நூற்றாண்டில் நுழைந்த களப்பிரர்கள் விரட்டியதால் இப்பகுதியின் பாரம்பரிய ஆட்சி வடிவம் மாறியது. பாண்டியர்கள் மற்றும் பல்லவர்கள் மீட்டெழுந்து களப்பிரர் ஆதிக்கத்தை முறியடித்து தங்களின் பாரம்பரிய பேரரசுகளை மீண்டும் நிலைநாட்டினர்.
வீழ்ந்திருந்த சோழர்கள் ஒன்பதாம் நூற்றாண்டில் பல்லவர்களையும் பாண்டியர்களையும் தோற்கடித்து, தங்களது பெரும் சக்தியாக எழுச்சியடைந்து கிட்டத்தட்ட தெற்கு தீபகற்பப் பகுதி முழுவதும் தங்கள் பேரரசை விரிவுபடுத்தினர். வங்காள விரிகுடா பகுதியில் சோழப் பேரரசு சுமார் 3,600,000 சதுர கி.மீ. அளவிற்குப் பரவி இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில் இருந்த சிரீ விசயா பேரரசு பகுதியையும் சோழரின் கடற்படை கட்டுப்பாட்டில் கொண்டிருந்தது.
வடமேற்கு பகுதியிலிருந்து வந்த இசுலாமிய படைகளின் ஊடுருவல் காரணமாக இந்தியாவின் மற்ற பகுதிகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் தமிழ்நாட்டின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது. பதினான்காம் நூற்றாண்டில் பண்டைய மூன்று பேரரசுகளின் வீழ்ச்சி காரணமாக, தமிழ்நாடு விசயநகரப் பேரரசின் ஒரு அங்கமாக மாறியது.
விசயநகரப் பேரரசின் கீழ் தெலுங்கு பேசும் நாயக்கர் ஆட்சியாளர்கள் தமிழ்ப் பகுதியை ஆட்சி செய்தனர். மராத்தியர்களின் குறுகிய கால வருகை தமிழ்ப் பகுதியில் ஐரோப்பிய வணிக நிறுவனங்களின் வருகைக்கு வழிவகுத்தது. பதினேழாம் நூற்றாண்டின் போது இவ்வாறு வணிகம் செய்ய வந்தவர்கள் இறுதியில் இந்தப் பகுதியின் பூர்வீக ஆட்சியாளர்களை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவந்தனர்.
தென்னிந்தியாவின் பல பகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாகாணம் பதினெட்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. இப்பகுதி பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியால் நேரடியாக ஆட்சி செய்யப்பட்டது. இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு மொழியியல் எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாடு மாநிலம் உருவாக்கப்பட்டது.
ALSO REFER





![தமிழ்நாடு வரலாறும் பண்பாடும் நவீன காலம் மற்றும் தற்காலம்| ஐரோப்பியர் வருகை முதல் நீதிக்கட்சி வரை (சி.இராஜகோபாலாச்சாரி முதல் மு.க.ஸ்டாலின் ஆட்சி (2021 - )] | இரண்டு நூல்களாக | இவற்றுடன் ரூ. 300/- மதிப்புடைய "திருக்குறள் கட்டுரைகள்" என்ற நூல் இலவசம்)|](https://karthicklawagency.com/wp-content/uploads/2025/12/T-N-THARKALAM-300x300.jpg)
Reviews
There are no reviews yet.