BUY அரசியலமைப்பு சட்டம் I ஜெயராஜன்| Constitutional Law I TAMIL JEYARAJAN| அரசியலமைப்பு அங்கங்களின் கட்டமைப்பு மற்றும் மத்திய மாநில உறவுகள் | Latest Edition | P R JEYARAJAN GUIDE | SRI PATHI RAJAN PUBLICATION | BEST TAMIL GUIDE FOR BL LLB STUDENTS |
அரசியலமைப்பு சட்டம் I என்ற இந்த அருமையான நூலில் ஆசிரியர் திரு. பி.ஆர்.ஜெயராஜன் அவர்கள் நமது இந்திய அரசியலமைப்பின்,-
- பின்னணி,
- தத்துவம்,
- அடிப்படை உரிமைகள் மற்றும்
- அடிப்படை கடமைகள்
பற்றி மிக அழகாக அவருக்கே உரித்த எளிய சட்டத் தமிழில் திறம்பட விளக்கியுள்ளார். குறிப்பாக இந்திய அரசியலமைப்பின் கீழ் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பல்வேறு அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றி மிக விரிவாக, வழக்கு வழி சட்டங்களுடன் நம் முன் வைத்துள்ளார்.
இந்த நன்னூல் சட்டக்கல்லூரி தேர்வுகள், சிவில் சர்விஸ் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு பன்னெடுங்காலமாக பயன் தந்து வருகின்றது. அந்த வகையில் தற்போது வெளிவந்திருக்கும் 4-ஆம் பதிப்பும் சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு நிச்சயம் பயன் தரும்.
நமது நாட்டின் மேன்மையான மற்றும் அடிப்படையான சட்டம் “இந்திய அரசியலமைப்பு சட்டம்” ஆகும். இது நமது நாட்டின் நிர்வாகம், சட்டமியற்றுதல், நீதி வழங்குதல் ஆகிய மூன்று அங்கங்களின் கட்டமைப்பை (Institutional Structure) எடுத்துரைக்கின்றது.
அவற்றிற்கான அதிகாரங்களை தனது பல்வேறு வகைமுறைகள் மூலம் வழங்குகின்றது. மேலும் அவ்வதிகாரங்கள் யாரிடம் இருக்க வேண்டும், அவை எப்படி பயன்படுத்தப்பட வேண்டும், அதன் மீதான வரம்புகள் யாவை என்பனவற்றையெல்லாம் அரசியலமைப்பு சட்டம் கூறி நெறிப்படுத்துகிறது. தொடர்ந்து இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கை துறைத் தலைவர், இந்திய தேர்தல் ஆணையம், அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றின் அதிகாரங்களையும் பணிகளையும் இந்திய அரசியலமைப்பு சட்டம் வகுத்துரைக்கின்றது.
இது ஒரு புறம் என்றால், மற்றொரு புறம் இந்தியக் கூட்டாட்சிக்கு வலு சேர்க்கும் வகையில் மத்திய – மாநில உறவுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் பல்வேறு உறுபுகள் அல்லது சரத்துகளின் வழியாக நமது அரசியலமைப்பு சட்டம் தெளிவாக வரையறுக்கின்றது. குறிப்பாக சட்டமியற்றுதல் குறித்த உறவுகள் (Legislative Relations), நிர்வாக உறவுகள் (Administrative Relations), நிதி சார் உறவுகள் (Fiscal Relations) என்ற மூன்று பரந்த வகைப்பாட்டின் கீழ் மத்திய-மாநில உறவுகளை திறம்பட எடுத்துரைக்கின்றது .
இச்சட்டம், அத்துடன் வியாபாரம் மற்றும் வணிகத்திற்கான சுதந்திரம் பற்றியும், அரசின் பொறுப்பு நிலை பற்றியும் விரிவாக கூறுகிறது. ஒரு நாட்டில் நெருக்கடி ஏற்பட பல காரணங்கள் உள்ளன.
அவற்றை விரிவாகக் கூறி, அதன் விளைவுகளையும் தெளிவுபடுத்துகின்றது, அரசியலமைப்பு சட்டம். அதுபோல் காலம் மற்றும் தேவைக்கு தகுந்தவாறு சட்டங்களில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டியது மக்களாட்சியின் அடிப்படை அம்சமாகும்.
அதற்கு அரசியலமைப்பு சட்டமும் விதிவிலக்கல்ல. அந்த வகையில் அரசியலமைப்பின் திருத்தம் பற்றி விரிவான வகைமுறைகளை வகுத்துள்ளது இந்திய அரசியலமைப்பு சட்டம்.
அரசியலமைப்புச் சட்டம் என்பது ஒரு மாநிலத்திற்குள் உள்ள பல்வேறு நிறுவனங்களின் பங்கு, அதிகாரங்கள் மற்றும் கட்டமைப்பை வரையறுக்கும் ஒரு சட்ட அமைப்பாகும் , அதாவது நிர்வாகம் , பாராளுமன்றம் அல்லது சட்டமன்றம் மற்றும் நீதித்துறை ; அத்துடன் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் அவர்களின் அரசாங்கங்களுடனான அவர்களின் உறவு, மற்றும் அமெரிக்கா மற்றும் கனடா போன்ற கூட்டாட்சி நாடுகளில் , மத்திய அரசுக்கும் மாநில, மாகாண அல்லது பிராந்திய அரசாங்கங்களுக்கும் இடையிலான உறவு.
ALSO






Reviews
There are no reviews yet.