இந்திய ஒப்பந்தச் சட்டம் I (பொதுக் கோட்பாடுகள்)
இந்திய ஒப்பந்தச் சட்டம் 1872 ( Indian Contract Act 1872) இந்தியாவில் ஒப்பந்தம் குறித்து ஆங்கிலேயர் காலத்தில் 1872 ஆம் ஆண்டிற்கு முன், அனைவருக்கும் பொருந்தக் கூடிய ஒரே மாதிரியான பிரிவுகள் அடங்கிய சட்டம் ஒன்றும் இல்லாமலிருந்ததது.
பல நிலப்பரப்புகள், பல பண்பாடுகள், பல அரசுகள் என்று பிளவுபட்டிருந்த காலங்களில் வாணிகத்தை நெறிப்படுத்த ஒரு முறையான சட்டம் தேவைப்பட்டது. இதற்காக இந்தச் சட்டம் 1872 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.[1]
இச்சட்டத்தில் மொத்தம் 238 பிரிவுகள் உள்ளன. இவற்றில் முதல் 75 பிரிவுகள் ஒப்பந்தத்தின் பொதுக் கோட்பாடுகள் குறித்து விளக்குகின்றன.
அதன்பின் வரும் பிரிவுகள் தனிவகை ஒப்பந்தங்கள் சிறப்பு ஒப்பந்தங்கள், ஈட்டுறுதி ஒப்பந்தம் மற்றும் பொறுப்புறுதி ஒப்பந்தம், ஒப்படைவுமுகவாண்மை முதலியன குறித்து விளக்குகின்றன. இதனிடையே சரக்குகள் விற்பனைகுறித்தும் கூட்டாண்மை ஒப்பந்தம்குறித்தும் இச்சட்டத்தில் இருந்த பிரிவுகள் நீக்கப்பட்டு அவை தனிச்சட்டங்களாக இயற்றப்பட்டுள்ளன.[2]
- ஒரு சில முக்கியமான விளக்கங்கள் (Definitions)பின்வருமாறு
- பிரிவு 2 (b) ஒப்பந்தம்சட்டத்தால் அமல்படுத்தக் கூடிய உடன்பாடே ஒப்பந்தம் ஆகும்.
- பிரிவு 2 (a) பரிவுரை அல்லது முனைவு (Proposal or Offer): ஒரு செயலை செய்வதாகவோ அல்லது செய்யாமலிருப்பதாகவோ ஒருவர் வேறொருவரிடம் கூறி அவரின் இசைவைப் பெற விரும்பினால் அது பரிவுரை ஆகும்.
- பிரிவு 2.(b) ஏற்பு (Acceptance): அவ்வாறு பரிவுரை செய்யப்பட்ட பின் வேறொருவர் அதனை ஏற்றுக்கொள்ளும் செயல் தான் ஏற்பு எனப்படும்.
- பிரிவு 2 (b),(c) உறுதியுரை (Promise): ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிவுரையே உறுதியுரை ஆகும்.
- பிரிவு 2 (c) உறுதியுரை அளிப்பவர் (Promisor) உறுதியுரை ஏற்பவர் (Promisee): பரிவுரையை தெரிவிக்கும் நபர் உறுதியுரையைத் அளிப்பவர் எனவும், அதனை ஏற்கும் நபர், உறுதியுரையை ஏற்பவர் எனவும் கூறப்படுவர்.
- பிரிவு 2 (d) மறுபயன் (Consideration): உறுதியுரையை ஏற்பவரோ அல்லது வேறு ஒருவரோ, உறுதியுரைக்காக செய்யப்படும் கைம்மாறு மறுபயன் எனப்படும்.
- பிரிவு 2(l) உடன்பாடு (Agreement): உறுதியுரை (Promise): ஒவ்வொரு உறுதியுரையும் ( Promise) அல்லது உறுதியுரைகளின் தொகுப்பு ஒவ்வொன்றும் (Set of Promises) ஒன்றுக்கொன்று மறுபயன் அளிக்கக் கூடியதாயின் அது உடன்பாடாகும்.
- பிரிவு 2(g) தகுதியில்லா உடன்பாடு (Void agreement): சட்டப்படி அமல் படுத்த முடியாத இந்த உடன்பாடு தகுதியில்லா உடன்பாடாகும்.
- பிரிவு 2 (i) தவிர்க்கக்கூடிய ஒப்பந்தம் (Voidable agreement): ஒப்பந்தம் ஏற்படுத்தக் கூடியவர்களில் யாரோ ஒருவர் விரும்பினாலும் தவிர்க்க இயலும் என்றால் அத்தகைய ஒப்பந்தம் இவ்வகையாகும்.
- பிரிவு 2 (j) செல்லத்தகாத ஒப்பந்தம் (Void contract): ஒப்பந்ததாரர்களால் செயல்படுத்த இயலாத ஒப்பந்தம் செல்லத்தகாத ஒப்பந்தம் ஆகும்.
ஒப்பந்தம்(Contract) என்பது ‘வாக்குறுதிகளைக் கொண்டு திறத்தவருக்கிடையே உருவாக்கப்படும் உடன்படிக்கைகள்’ ஆகும்.(an “agreement” made of a set of promises).இவ் வாக்குறுதிகள் ஒப்பந்ததில் ஈடுபடும் திறத்தவர்களுக்கிடையேயான கடமைகள் கட்டுப்பாடுகள் பற்றியதாக இருக்கும்.ஒப்பந்தமானது சட்ட ஆளுமையுடையதால் ஒப்பந்த முறிவு (Breach of contract) ஏற்படும் சந்தர்பங்களில் நீதிமன்றங்களை நாடி குறைதீர்ப்பினை (remedies) பெறமுடியும்.
இந்திய ஒப்பந்தச் சட்டம் I (பொதுக் கோட்பாடுகள்) | Indian Contract Act – I (General Principles) in TAMIL
ஒப்பந்த சட்டத்தின் பரப்பெல்லை
- எப்போது மற்றும் எவ்வாறு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது ?
- எப்போது திறத்தவர்களால் ஒப்பந்த கடப்பாடுகளிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள முடியும்?
- ஒப்பந்த விதிப்பிற்கு (terms of contract) எம்மாதிரியான அர்த்தம்,விளைவு கொடுக்கப்பட்டுள்ளது?
- ஒப்பந்த முறிவிற்கு எம்மாதிரியான பரிகாரம் கூறப்பட்டுள்ளது?
போன்ற விடயம் தொடர்பில் ஒப்பந்தசட்டம் தன் கவனத்தில் கொள்கின்றது.
ஒப்பந்த உருவாக்கம்
ஒப்பந்தம் திறத்தவர்களிடையே தெளிவான கொடைமுனைவும் நிபந்தனையற்ற ஏற்பும் பரஸ்பர புரிந்துணர்வுடன் ஒர் விடயபொருள் தொடர்பில் சந்திக்கும்போது உருவாகும்.
மேலும்,
- Form – In some cases, certain formalities (that is, writing) must be observed.
- தகைமை (Capacity) – ஒப்பந்ததில் ஈடுபடுவதற்கான முறையான தகுதி திறத்தவர்களுக்கு கட்டாயமாக இருக்க வேண்டும்.
- உடன்பாடு (Consent) – ஒப்பந்தமானது மிரட்டல்,அச்சுறுத்தல் போன்ற காரணத்தால் அல்லாது மன உடன்பாடுடன் மேற்கொள்ளவேண்டும்.
- சட்டத்தன்மை (Legality) – ஒப்பந்ததின் நோக்கம் நாட்டில் அமுலில் இருக்கும் பொதுசட்டத்தை மீறும் வகையிலோ,முரணாகவோ அமையாது சட்டதினை அனுசரிக்கவேண்டும்.
போன்ற இதர காரணிகளால் ஒப்பந்தமானது வலிதான ஒப்பந்தமாக ஆக்கப்படும்.மேற்கூறிய காரணிகளின் எதேனும் விடுபாடுகள் இருப்பின் அத்தகைய ஒப்பந்தங்கள் வறிதான ஒப்பந்தமாகவோ (void),வறிதாக்கதக்க ஒப்பந்தமாகவோ(voidable),செயற்படுத்தமுடியா ஒப்பந்தமாகவோ (unenforceable) சட்டதினால் அடையாளப்படுத்தப்படும்.
வலிதான ஒப்பந்ததின் கூறுகள்
- பரஸ்பர புரிந்துணர்வு (Mutual agreement)
- பெறுமதி (Consideration)
- தகைமை – திறத்தவர்கள் ஒப்பந்தம் தொடர்பான கடமை,கடப்பாடுகளை அறிந்திருக்கும் தன்மையினை பெற்றிருக்கவேண்டும்.சட்டமானது பராயமடையாதோர் (18 வயதிற்கு உட்பட்டவர்கள்),மனநலம் குறைந்தவர்கள் போன்றவர்களை ஒப்பந்ததில் ஈடுபடும் தகமை அற்றவராக கணிக்கின்றது.
- முறையான ஒப்பந்தப் பொருள் (Proper Subject Matter) – ஒப்பந்த நோக்கமானது சட்டஒப்புதல் பெற்ற விடயமாக இருத்தல் வேண்டும்.அவ்வாறு சட்ட ஒப்புதல் பெறாத விடயம் தொடர்பில் செய்து கொள்ளப்படும் ஒப்பந்தமானது ஆரம்பம்முதலே(ab initio) வறிதான ஒப்பந்தமாக கொள்ளப்படும்.
- Mutual Right to Remedy – ஒப்பந்தமுறிப்பு தொடர்பில் உரிய நிவராணத்தினை பெறும் உரிமையினை ஒப்பந்ததில் ஈடுபடும் இருதிறத்தவர்களும் கொண்டிருக்க வேண்டும்.
- Mutual Obligation to Perform.
ALSO





Reviews
There are no reviews yet.